அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு
அரசு பள்ளி மாணவிக்கு Appreciation தெரிவிக்கப்பட்டது
தேவகோட்டை
தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட நூலக புத்தகங்களை படித்த மாணவிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் முன்னிலை வகித்தார். இளம்வயதில் 100-க்கும் மேற்பட்ட நூலக புத்தகங்களை படித்து அதன் கருத்துக்களை எடுத்து கூறிய 8-ம் வகுப்பு மாணவி திவ்யஸ்ரீக்கு தேவகோட்டை நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் ரூ.2 ஆயிரம், பொன்னாடை, புத்தகங்கள் வழங்கி பாராட்டினார். பின்னர் அவர் பேசுகையில், புத்தகங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமானது. இளமையில் வாசிக்க, வாசிக்க நமக்கு வாழ்க்கை மிகவும் வசப்படும். வாசிப்பை நேசிப்போம். பெற்றோரால் செல்வத்தை மட்டுமே கொடுக்க முடியும். ஆனால் அது நமக்கு நிரந்தரம் ஆகாது. கல்வி தான் மிக முக்கியமானது. கல்விதான் நமது வாழ்க்கையில் மிகப்பெரிய சொத்து. எனவே அனைவரும் நல்ல முறையில் புத்தகங்களை வாசிக்க கற்றுக்கொள்ளுங்கள். மிகப் பெரிய இலக்குகளை உருவாக்கி, அதனை நோக்கி உங்களது வாழ்க்கையை செயல்படுத்துங்கள் என்று பேசினார். முடிவில் ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.