முதலிடம் பிடித்த மாணவிக்கு எம்.எல்.ஏ. பாராட்டு


முதலிடம் பிடித்த மாணவிக்கு எம்.எல்.ஏ. பாராட்டு
x
தினத்தந்தி 11 May 2023 12:15 AM IST (Updated: 11 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

முதலிடம் பிடித்த மாணவிக்கு எம்.எல்.ஏ. பாராட்டு தெரிவித்தார்

சிவகங்கை

மானாமதுரை

மானாமதுரை பழைய போஸ்ட் ஆபிஸ் தெருவை சேர்ந்த ரவிராஜ்-வனிதா தம்பதியினரின் மகள் ஜனனி. இவர் 5-ம் வகுப்பு படிக்கும் போதே தந்தை இறந்து விட்டார். தாயாரால் எந்த வேலையும் செய்ய முடியாத நிலையில் பாட்டி லலிதாவின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார். மானாமதுரை அரசு பெண்கள் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்தார். நடந்து முடிந்த பிளஸ்-2 வகுப்பு பொதுத்தேர்வில் 592 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். மேலும் மாவட்டத்திலேயே அரசு பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார். முதலிடம் பிடித்த மாணவி ஜனனியை மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. தமிழரசி நேரில் அழைத்து பாராட்டி ரொக்கப்பரிசு வழங்கினார். அவருடன் முதல் 3 இடங்களை பிடித்த மாணவிகளுக்கும் பாராட்டு தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாணவிகளுடன், ஆசிரியைகளும் கலந்து கொண்டனர்.


Next Story