சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா
யோகாசன போட்டியில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.
ஓசூர்:
நோபல் வேல்டு ரெக்கார்டு சார்பில் சென்னையில் இருந்து ஆன்லைன் வாயிலாக யோகாசன போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், ஓசூரில் செயல்பட்டு வரும் காரிகை யோகா பயிற்சி மாணவர்கள் சாய்சனா, தனுஸ்ரீ, அனுருத்ரா, பிருத்வி, மாதேஷ், சக்தி, குணஸ்ரீ, ஆதித்யா ஆகிய 8 பேர் பங்கேற்று 1 மணி நேரம் பக்தகோணாசனா யோகா பயிற்சியை செய்து உலக சாதனை படைத்தனர். அதற்கான சான்றிதழை நோபல் வேல்டு ரெக்கார்டு என்ற அமைப்பு வழங்கியது.
உலக சாதனை படைத்த இந்த மாணவர்களுக்கு ஓசூரில் தனியார் குடியிருப்பு பகுதியில் பாராட்டு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு குடியிருப்போர் நல சங்க தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார்., ஓசூர் மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் என்.எஸ்.மாதேஸ்வரன் கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளை பாராட்டி, சான்றிதழ், பதக்கம், கோப்பை ஆகியவற்றை வழங்கினார். இதில், யோகா பயிற்சியாளர் உஷா, சிவக்குமார் நகர் குடியிருப்போர் சங்க தலைவர் பிரகாஷ், அன்னை நகர் குடியிருப்போர் சங்க தலைவர் பால மணிகண்டன், தி.மு.க. நிர்வாகிகள் ரவி, கண்ணன், தாமோதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.