தூய்மை காவலர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா
திருப்பத்தூர் நகராட்சியில் தூய்மை காவலர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.
திருப்பத்தூர் நகராட்சியில் பணிபுரிந்த 8 தூய்மை காவலர்கள் ஒரே நாளில் ஓய்வு பெற்றனர். அவர்களுக்கு சி.ஐ.டி.யு. மற்றும் ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா, நகராட்சி சார்பில் பணிக்கொடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சி.ஐ.டி.யு. துப்புரவு பணியாளர்கள் சங்க துணைத் தலைவர் பொன்னுசாமி, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் சுந்தரேசன் ஆகியோர் தலைமை வகித்தனர். அனைவரையும் செயலாளர் ஏ.ரவி வரவேற்றார்.
நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ், துப்புரவு அலுவலர் இளங்கோ ஆகியோர், பணி ஓய்வு பெற்ற தூய்மை காவலர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட பணிக்கொடையை வழங்கி பேசினார்கள். நிகழ்ச்சியில் சி.ஐ.டி.யு. தூய்மை பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் சரவணன், துணைத் தலைவர் சங்கர், மாவட்ட பொருளாளர் முருகேசன், துணைச் செயலாளர் சின்னத்தம்பி, ஏ.ஐ.டி.யூ.சி. துப்புரவு பணியாளர் சங்க தலைவர் பி.வெங்கடேசன், பொருளாளர் ஆர்.கோபி, கவுரவத் தலைவர் டி.கே.ராமு உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, பரிசுகளை வழங்கினர்.