சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்


சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்
x

மருத்துவ காப்பீடு திட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

திருப்பத்தூர்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்ய திட்டம் சார்பில் 5 ஆண்டுகள் நிறைவு பெற்றதற்கான விழா திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் பயனடைந்த 5 நோயாளிகளுக்கு பரிசும், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டைகள் 10 பேருக்கும், சிறப்பாக பணிபுரிந்த ஆம்பூர், வாணியம்பாடி அரசு மருத்துவமனைகள், 2 தனியார் மருத்துவமனைகள், அரசு மருத்துவமனையில் சிறப்பாக பணிபுரிந்த வார்டு மேலாளர்கள் 4 பேர், தொடர்பு அலுவலர்கள் 5 பேர் ஆகியோருக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் நலப்பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து, சுகாதார பணிகள் துணை இயக்குனர் செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story