சதுரங்க போட்டிக்கு தேர்வான குளித்தலை அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு


சதுரங்க போட்டிக்கு தேர்வான குளித்தலை அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டு
x

சதுரங்க போட்டிக்கு தேர்வான குளித்தலை அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டினர்

கரூர்

குளித்தலை வட்டார அளவில் நடந்த சதுரங்க போட்டியில் குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவிகள் சிலர் வெற்றி பெற்றிருந்தனர். இதையடுத்து மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் இந்த மாணவிகள் பங்கேற்றனர். இதில் இப்பள்ளியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவி மித்ரா 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பங்கேற்று முதலிடம் பெற்றார். இதையடுத்து இந்த மாணவி மாநில அளவில் ெசன்னையில் நடைபெற உள்ள சதுரங்க போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.

மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க செல்ல உள்ள மாணவி மித்ராவை இப்பள்ளியின் தலைமை ஆசிரியை மஞ்சுளா, உடற்கல்வி ஆசிரியை சுகந்தா, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதுபோல் இப்பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி அபி மாவட்ட அளவிலான சதுரங்க விளையாட்டு போட்டியில் 5-ம் இடத்தை பெற்றுள்ளார். இந்த மாணவிக்கும் ஆசிரியர்கள், மாணவிகள் தங்கள் பாராட்டை தெரிவித்துக் கொண்டனர்.


Next Story