தாய்மையை போற்ற ரூ. 5 கோடியில் தாஜ்மகால் கட்டிய பாச மகன்...! எங்கு தெரியுமா?


தாய்மையை போற்ற  ரூ. 5 கோடியில் தாஜ்மகால் கட்டிய பாச மகன்...! எங்கு தெரியுமா?
x
தினத்தந்தி 10 Jun 2023 3:07 PM IST (Updated: 10 Jun 2023 3:11 PM IST)
t-max-icont-min-icon

சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் 8 ஆயிரம் சதுர அடியில், 46 அடி உயரத்தில் ரூ.5 கோடியில் தாஜ்மகால் போன்று கட்டப்பட்டுள்ளது. உ

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் கிராமத்தைச் சேர்ந்தவர் அமுர்தீன். இவர் சென்னையில் தொழிலதிபராக உள்ளார். இவர் 11 வயது இருக்கும் போது தந்தை அப்துல்காதர் உயிரிழந்துள்ளார்.

இதனால் அவரது தாய் ஜெய்லானி பீவி தனது மகன் மற்றும் மகள்களை நன்றாகப் படிக்க வைத்துக் கரை சேர்த்துள்ளார். இதனால் தாயார் மீது அமுர்தீன் அளவு கடந்த பாசம் வைத்துள்ளார்.

இதையடுத்து வயது முதிர்வின் காரணமாக ஜெய்லானி பீவி 2020ம் ஆண்டு உயிரிழந்துள்ளார். பின்னர் தனது தாயாருக்கு ஒரு நினைவில்லம் கட்ட அமுரீதின் முடிவெடுத்துள்ளார். அப்போது டெல்லியில் உள்ள தாஜ்மகாலை போன்றே தனது தாயாருக்கு நினைவில்லம் கட்ட வேண்டும் என முடிவெடுத்து, இதற்காக ராஜஸ்தானில் இருந்து வெள்ளை பளிங்குக் கற்களை வரவைத்துள்ளார்.

இதையடுத்து கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டுமானப்பணிகள் நடைபெற்று வந்தது. பிறகு முழு வேலைகள் முடிந்து ஜூன் 2ம் தேதி எளிமையான முறையில் நினைவில்லம் திறக்கப்பட்டுள்ளது.

சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் 8 ஆயிரம் சதுர அடியில், 46 அடி உயரத்தில் ரூ.5 கோடியில் தாஜ்மகால் போன்று கட்டப்பட்டுள்ளது. உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை பார்க்க அனைவராலும் முடியாத நிலையில் இந்த தாஜ்மகால் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள மக்கள் அனைவரும் கண்டு ரசித்து வருகின்றனர். இதைத் தென்னகத்தின் தாஜ்மகால் என்று அழைக்கின்றனர்.


Next Story