செஸ்ஒலிம்பியாட் காணச்செல்லும் அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு


செஸ்ஒலிம்பியாட் காணச்செல்லும் அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு
x

செஸ்ஒலிம்பியாட் காணச்செல்லும் கோவில்பட்டி அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்ட அளவில் அரசு பள்ளி மாணவ, மாணவர்களுக்கு செஸ் போட்டி தூத்துக்குடி தருவை மைதானத்தில் ஜூலை 25-ந்தேதி நடைபெற்றது. இதில் 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான செஸ் போட்டியில் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி சுவேதா முதலிடமும், சுபலட்சுமி 2-வது இடமும், 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான செஸ் போட்டியில் கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைபள்ளி மாணவி ஷர்மிளா 3-வது இடமும் பெற்று வெற்றி பெற்றனர். இந்த மாணவிகள் 3 பேரும் தமிழக அரசின் சார்பில் தூத்துக்குடி யிலிருந்து சென்னைக்கு விமானத்தில் சென்று சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியினை காண அழைத்துச் செல்லப் படுகின்றனர். இந்த மாணவிகளை கோவில் பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஜெயலதா பாராட்டி பரிசு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி உடற்கல்வி இயக்குனர் காளிராஜ், உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜேஸ்வரி, லட்சுமி, அந்தோணி யம்மாள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story