நெருங்கும் தீபாவளி பண்டிகை: விற்பனையை எதிர்நோக்கும் சிவகாசி பட்டாசு வியாபாரிகள்
சிவகாசி பகுதியில் ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகை விற்பனையை எதிர்பார்த்து, பட்டாசுக் கடைகள் திருவிழாக்கோலம் பூண்டுள்ளன.
சிவகாசி,
சிவகாசி பகுதியில் ஆயுத பூஜை மற்றும் தீபாவளி கொண்டாட பட்டாசு வியாபாரத்தை வியாபாரிகள் எதிர்நோக்கியுள்ளனர். ஒவ்வொரு பட்டாசுக் கடையிலும் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக வண்ண மின்விளக்குகளால் பட்டாசுகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 20 நாட்கள் மட்டுமே இருப்பதால், ஆயுத பூஜைக்குப் பிறகு வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் வந்து பட்டாசுகளை வாங்கிச் செல்வார்கள் என்ற நம்பிக்கையுடன் வியாபாரிகள் காத்திருக்கிறார்கள்.
Related Tags :
Next Story