5-ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு, ஆன்லைன் மூலம் திறனாய்வு மதிப்பீடு
பெரிய கொழப்பலூர் தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு, ஆன்லைன் மூலம் திறனாய்வு மதிப்பீடு நடந்தது.
சேத்துப்பட்டு
பெரிய கொழப்பலூர் தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு, ஆன்லைன் மூலம் திறனாய்வு மதிப்பீடு நடந்தது.
பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியம் பெரிய கொழப்பலூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5 -ம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு செல்போன் மூலமாக ஆன்லைனில் அடிப்படை திறனாய்வு மதிப்பீடு செய்யப்பட்டது.
தமிழ், ஆங்கிலம், கணிதம் பாடங்களில் மாணவ, மாணவிகள் திறனாய்வு செய்யப்பட்டனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியை பி.மலர்விழி தலைமை தாங்கினார். வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் சரண்ராஜ், ஆசிரியர்கள் எம்.பொன்சேகா, ஏ.ஜோஸ்பின்மேரி, என்.செல்லம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இதனை பெரணமல்லூர் வட்ட கல்வி அலுவலர் கோ.குணசேகரன் தொடங்கி வைத்தார். அனைவரையும் சிபார்பரா மேரி வரவேற்றார். பள்ளியில் புதிதாக 24 மாணவ மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஒன்றிய அளவில் அதிகமான மாணவ மாணவிகளை சேர்த்தமைக்கு தலைமை ஆசிரியை மலர்விழி மற்றும் ஆசிரியர்களை வட்ட கல்வி அலுவலர் கோ.குணசேகரன் பாராட்டினார்.
தொடர்ந்து அவர் 1-ம் வகுப்பை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு, வாய்ப்பாடு, பள்ளி சீருடை ஆகியவற்றை வழங்கினார். 1 முதல் 5-ம் வகுப்புவரை வரையிலும் மனப்பாடமாக வாய்ப்பாடு, பாடங்களை வாசித்த மாணவிக்கு வட்டார கல்வி அலுவலர் பரிசு வழங்கினார்.