கள்ளக்குறிச்சி ஏகேடி பள்ளியில் திறனறிவுத்தேர்வு 6-ந் தேதி நடக்கிறது


கள்ளக்குறிச்சி ஏகேடி பள்ளியில் திறனறிவுத்தேர்வு 6-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 2 May 2023 12:15 AM IST (Updated: 2 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி ஏகேடி பள்ளியில் திறனறிவுத்தேர்வு 6-ந் தேதி நடக்கிறது.

கள்ளக்குறிச்சி

அடிப்படையில் பள்ளி மாணவ, மாணவிகளின் கல்வி திறமைகளை மேம்படுத்தவும், கல்வி கற்கும் ஆற்றலின் திறனை வெளிப்படுத்தும் வகையில் திறனறிவுத்தேர்வு கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளியில் வருகிற 6-ந்தேதி(சனிக்கிழமை) காலை 10 மணி முதல் 11.30 மணி வரை நடக்கிறது.

தேர்வில் அரசு மற்றும் தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான ஸ்டேட் போர்டு, மெட்ரிக், சி.பி.எஸ்.இ. ஆங்கில வழி மாணவ- மாணவிகள் கலந்து கொள்ளலாம். அனுமதி இலவசம். இந்த தேர்வில் கணிதப் பாடத்தில் 10 கேள்விகள், இயற்பியலில் 10 கேள்விகள், வேதியியலில் 10 கேள்விகள், உயிரியலில் 10 கேள்விகள் என மொத்தம் 40 மதிப்பெண்களுக்கு ஒரு மதிப்பெண் வினாக்களாக கேட்கப்படும்

பஸ் வசதி

தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி தேர்வு எழுதி வெற்றி பெறும் ஒவ்வொரு வகுப்பிலும் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு முதல் பரிசாக மடிக்கணினி, 2 மற்றும் 3-ம் இடம் பிடிப்பவர்களுக்கு டேப், 4 முதல் 10-ம் இடம் வரை ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்படுகிறது. தேர்வு எழுத மாணவ, மாணவிகள் வந்து செல்வதற்கு கட்டணமில்லா பள்ளி பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடலூர், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, வேப்பூர், விழுப்புரம், திருக்கோவிலூர், விருத்தாசலம், மூங்கில்துறைப்பட்டு ஆகிய ஊர்களின் தொடக்கத்தில் இருந்து வழிதடங்களில் இயக்கப்படும் பள்ளி பஸ்களை பயன்படுத்திக் கொள்ளலாம். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பல்வேறு ஊர்களிலிருந்து இருந்து இயக்கப்படும் ஏ.கே.டி.பள்ளி பஸ்களையும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்படுகிறது. தேர்வு எழுதுபவர்கள் 63691 46590 என்ற எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

மேற்கண்ட தகவல் பள்ளி முதல்வர் வெங்கட்ரமணன் தெரிவித்துள்ளார்.


Next Story