அரகண்டநல்லூர் ஸ்ரீலட்சுமி வித்யாஷ்ரம் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரகண்டநல்லூர் ஸ்ரீலட்சுமி வித்யாஷ்ரம் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது.
கள்ளக்குறிச்சி
திருக்கோவிலூர்:
அரகண்டநல்லூரில் செயல்பட்டு வரும் ஸ்ரீலட்சுமி வித்யாஷ்ரம் சீனியர் செகண்டரி சி.பி.எஸ்.இ. பள்ளியில் 10-ம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம் 100 சதவீத தேர்ச்சி என்ற சிறப்பை இப்பள்ளி பெற்றுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டும் இப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது. மாணவிகள் தேவிப்பிரியா 500-க்கு 448 மதிப்பெண்களும், பிரதீஷா-393, சரஸ்வதி-393, திவ்யஸ்ரீ-390 மதிப்பெண்களும் எடுத்துள்ளனர். இந்த தேர்வில் சாதனை படைத்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் ராஜகோபாலன், செயலாளர் ராஜாசுப்ரமணியம், முதல்வர் நித்யா ஆகியோர் வாழ்த்தினார்கள். அப்போது பள்ளியின் துணை முதல்வர் உஷா, ஸ்ரீ லட்சுமி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் பரணி, நிர்வாக அலுவலர் பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story