இருளில் மூழ்கும் அரக்கோணம்-திருத்தணி நெடுஞ்சாலை


இருளில் மூழ்கும் அரக்கோணம்-திருத்தணி நெடுஞ்சாலை
x

மின்விளக்கிகள் இல்லாததால் அரக்கோணம்-திருத்தணிநெடுஞ்சாலை இருளில் மூழ்குவதாகவும், இதனால் சமூக விரோத செயல்கள் நடப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ராணிப்பேட்டை

அரக்கோணம்

மின்விளக்கிகள் இல்லாததால் அரக்கோணம்-திருத்தணி நெஞ்சாலை இருளில் மூழ்குவதாகவும், இதனால் சமூக விரோத செயல்கள் நடப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இருளில் மூழ்கும் சாலை

அரக்கோணம் பகுதியில் இருந்து ஸ்ரீ பெரும்புதூர், திருவள்ளூர் மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், இச்சிபுத்தூர், தணிகை போளூர், வளர்புரம், வாணியம்பேட்டை, வடமாம்பாக்கம், நாகாலம்மன் நகர் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் அரக்கோணம் - திருத்தணி நெடுஞ்சாலையை பயன்படுத்துகின்றனர். பொது மக்கள் செல்லும் இந்த பிரதான சாலையில் மின் விளக்குகள் அமைக்கப்படாமலும், குறிப்பிட்ட இடம் வரையில் உள்ள மின் கம்பங்களில் இருக்கும் மின் விளக்குகள் எரியாமலும் உள்ளது.

மேலும், இந்த சாலையில் உள்ள மேம்பாலத்திலும் மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை. இதனால் இப்பகுதி இருள் சூழ்ந்த நிலையில் உள்ளது. இதன் காரணமாக, விபத்துகள் ஏற்படுகின்றன. வழிப்பறி சம்பவங்கள், கஞ்சா விற்பனை போன்ற சமூக விரோத செயல்களும் அரங்கேறுகின்றன.

சுகாதார சீர்கேடு

இதனால், இரவு நேரங்களில் பெண்கள் இந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வது சவாலானதாக உள்ளது என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே இந்த சாலையில் மின் விளக்குகளை பொருத்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த சாலையையொட்டி குப்பைகளை பலரும் கொட்டுகின்றனர். இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே, இந்த சாலையை தூய்மையாக பராமரிக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story