ஆரணி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் குழந்தை திருமண எதிர்ப்பு உறுதிமொழி

ஆரணி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் குழந்தை திருமண எதிர்ப்பு உறுதிமொழி
x
தினத்தந்தி 16 Oct 2023 10:33 PM IST (Updated: 16 Oct 2023 11:23 PM IST)
t-max-icont-min-icon

ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் குழந்தை திருமண எதிர்ப்பு உறுதிமொழியை மாணவிகள் ஏற்றனர்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் குழந்தை திருமண எதிர்ப்பு உறுதிமொழியை மாணவிகள் ஏற்றனர்.

பள்ளிகளில் காலை இறைவணக்கத்தின்போது குழந்தை திருமண எதிர்ப்பு உறுதிமொழி ஏற்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆரணி கோட்டை மைதானம் அருகே உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் குழந்தை திருமண எதிர்ப்பு உறுதிமொழி பள்ளி தலைமை ஆசிரியை தாமரைச்செல்வி தலைமையில் நடந்தது.

அப்போது 18 வயதுக்கு கீழ் உள்ள பெண் குழந்தைளுக்கு திருமணம் செய்து வைப்பது குற்றம், தானாக அவர்கள் திருமணம் செய்வதும் குற்றம் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

நிகழ்ச்சியில் மாணவிகளுடன் ஆசிரியர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Next Story