ஆரணி கண்ணம்மாள் பன்னாட்டு சி.பி.எஸ்.இ. பள்ளியில் தாத்தா- பாட்டி தினம் கொண்டாட்டம்
ஆரணி கண்ணம்மாள் பன்னாட்டு சி.பி.எஸ்.இ. பள்ளியில் தாத்தா- பாட்டி தினம் கொண்டாட்டப்பட்டது.
திருவண்ணாமலை
ஆரணி
ஆரணி கண்ணம்மாள் பன்னாட்டு சி.பி.எஸ்.இ. பள்ளியில் தாத்தா- பாட்டி தினம் கொண்டாட்டப்பட்டது.
ஆரணி மில்லர்ஸ் ரோடு உள்ள ஏ.சி.எஸ்.கல்வி குழுமத்தின் ஒரு அங்கமான கண்ணம்மாள் பன்னாட்டு சி.பி.எஸ்.இ. பள்ளியில் கே.ஜி. மழலையர் மாணவ, மாணவிகளுக்காக தாத்தா - பாட்டி தினம் கொண்டாடப்பட்டது.
பள்ளியின் செயலாளர்கள் ஏ.சி.பாபு, ஏ.சி.ரவி ஆகியோர் தலைமை தாங்கினர். பள்ளியின் முதல்வர் எ.ரஞ்சனி வரவேற்றார். முதுநிலை முதல்வர் டி.அருளாளன் வாழ்த்தி பேசினார். கே.ஜி. பள்ளி குழந்தைகளின் தாத்தா , பாட்டிகளுக்காக பல்வேறு திறன் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் பெற்றோர்கள், தாத்தா, பாட்டிகள், குழந்தைகள், ஆசிரியர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர். முடிவில் துணை முதல்வர் ஏ. ஜெகன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story