ஆரணி நகர போலீஸ் நிலையத்திற்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று
ஆரணி நகர போலீஸ் நிலையத்திற்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று வழங்கப்பட்டது.
ஆரணி
ஆரணி நகர போலீஸ் நிலையத்திற்கு ஐ.எஸ்.ஓ. தரச்சான்று வழங்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களும் ஐ.எஸ்.ஓ. தரச்சான்று கிடைப்பதற்காக கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் வழக்குகள் விசாரணையை துரிதப்படுத்தவும் நடவடிக்கை எடுத்தார்.
அதன்படி சென்னையில் உள்ள பதிவு ஆவண மதிப்பிட்டு அமைப்பின் மூலம் தேர்வு செய்வதற்காக அனைத்து காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அதன் பேரில் ஆரணி நகர போலீஸ் நிலையத்தின் முகப்பில் எல்.1 நகர ஆரணி நகர காவல் நிலையம் என எல்.இ.டி.லைட் மூலம் முகப்பு பெயர்ப்பலகையும், ஆய்வாளர் அறை, உதவி ஆய்வாளர்கள் அறை, வரவேற்பாளர்கள் அறை, புகார் மனு தர வருபவர்களுக்கு இருக்கை பகுதி, கணினி அறை, ஆண் கைதி அறை, பெண் கைதி அறை, பதிவு அறை, நீதிமன்ற ஆவணங்கள் வைக்கும் அறை, ஓய்வ றை ஆரணி துணை போலிஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மேற்பார்வையில் ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல் ராஜன் தலைமையில் ஏற்படுத்தப்பட்டது.
இதனை சென்னையில் இருந்து பதிவு ஆவண மதிப்பீட்டாளர்கள் மூலம் ஆய்வு செய்து அங்கீகரித்தனர். இதனையடுத்து மதிப்பீட்டாளர்கள் பி. கார்த்திகேயன், கே. வனிதா ஆகியோர்தமிழ் வருட பிறப்பையொட்டி ஆரணி நகர காவல் நிலையத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல் ராஜிடம் ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழனை வழங்கினர். அப்போது ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர்கள் சுந்தரேசன், கிருஷ்ணமூர்த்தி, வெங்கடேசன் உள்பட போலீசார் இருந்தனர்.
==========