சமணர், பெருமாள் மலை பகுதிகளில் தொல்லியல் பொருட்கள் கண்ெடடுப்பு


சமணர், பெருமாள் மலை பகுதிகளில் தொல்லியல் பொருட்கள் கண்ெடடுப்பு
x

சமணர், பெருமாள் மலை பகுதிகளில் தொல்லியல் பொருட்கள் கண்ெடடுப்பு

மதுரை

நாகமலைபுதுக்கோட்டை

நாகமலைபுதுக்கோட்டை அருகே சமணர் மலை, பெருமாள் மலை பகுதிகளில் ஏராளமான தொல்லியல் பொருட்கள், சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தொல்லியல் பொருட்கள்

மதுரை நாகமலைபுதுக்கோட்டை அருகே உள்ள சமணர் மலையில் ஏராளமான கற்சிற்பங்கள், பிராமி கல்வெட்டுக்கள், மலை மீது சுனையுடன் கூடிய கல்வெட்டும் காணப்படுகிறது. இதன் அருகே பெருமாள் மலை பகுதியிலும் கற்சிற்பங்கள், கல்வெட்டுக்கள், மலை அடிவாரத்தில் பண்டைய தொல்லியல் பொருட்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

அதேபோன்று செக்கானூரணி அருகே கொங்கர் புளியங்குளம் மலை மீது சமணர் சிற்பங்கள், கற்படுக்கைகள், கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இரும்பு பொருட்களை பயன்படுத்தியதற்கான ஆதாரங்கள் காணப்படுகின்றன. இப்பகுதிகளில் உள்ள பல்வேறு பழமையான கிராமக் கோவில்களில் ஏராளமான கல்வெட்டுக்கள், போர் வீரர் சிலைகள் உள்ளன.

அகழாய்வு

மலையடிவாரங்களில் ஏராளமான தொல்லியல் எச்சங்கள் கேட்பாரற்று பரவிக்கிடக்கின்றன. பொதுமக்களில் சிலர் பழமையான செப்பேடுகள், ஓலைச்சுவடிகளை அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் தெரியாமலே பாதுகாத்து வருகின்றனர். எனவே ஆதிச்சநல்லூர், கீழடியைப் போன்று இப்பகுதியிலும் தொல்லியல் துறை அகழாய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே தொல்லியல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Next Story