ஆலத்துடையான்பட்டி கோவிலில் தொல்லியல் துறையினர் ஆய்வு
ஆலத்துடையான்பட்டி கோவிலில் தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர்
திருச்சி
உப்பிலியபுரம், செப்.18-
உப்பிலியபுரம் ஒன்றியம் ஆலத்துடையான்பட்டியில் சவுந்தரவல்லி தாயார் உடனாய சோமநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். சோழர்காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவில் கடந்த பல வருடங்களாக புனரமைக்கப்படாமல் சிதிலமடைந்த நிலையில் உள்ளது.முசிறி இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள இக்கோவிலை புனரமைத்து குடமுழுக்கு செய்ய, சிவனடியார்கள், பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்ததன் பேரில், கோவிலின் தற்போதைய நிலையை அறிய தொல்லியல் துறையை சேர்ந்த பேராசிரியர் சேரன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் அறிக்கையின்படி இக்கோவில் சீரமைக்கப்படும் என தெரிகிறது.
Related Tags :
Next Story