ஆற்காடு எஸ்.எஸ்.எஸ். மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு எஸ்.எஸ்.எஸ். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். டி.வைஷ்ணவி, பி.கோபிநாத், எஸ்.பிரவீன் ஆகியோர் பல்ளி அளவில் முதல் 3 இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
பிளஸ்-1 பொதுத் தேர்வில் டி.திருமுருகன், பி.ஆர்.விஷ்ணு பிரசாத், வி.ஜீவானந்தம் ஆகியோர் பள்ளி அளவில் சாதனை படைத்துள்ளனர். அதேபோல் நடந்து முடிந்த 12-ம் வகுப்பு பொதுத் தேர்விலும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த மற்றும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எஸ்.எஸ்.எஸ். பள்ளி மற்றும் கல்லூரிகள் நிறுவனத் தலைவர் ஏ.கே.நடராஜன் தலைமை தாங்கி அதிக மதிப்பெண்கள் மற்றும் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி பாராட்டு தெரிவித்தார் . மேலும் 10-ம் வகுப்பு தொதுத்தேர்வில் 375 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்திருந்தால் 11-ம் வகுப்பில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு 20 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
இதில் பொருளாளர் ஏ.என். சரவணன், மேனேஜிங் டிரஸ்டி ஏ.என்.செல்வம், செயலாளர் ஏ.என்.சங்கர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.