அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு எழுத ஆர்வம் காட்டவில்லையா? அமைச்சர் விளக்கம்
அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வு எழுத ஆர்வம் காட்டவில்லையா? அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்.
தஞ்சாவூர்,
தஞ்சையில் நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-
மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். பொதுத்தேர்வில் வாங்கும் மதிப்பெண் குறைவாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும், உங்களுக்கான தனித்திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். பொதுத்தேர்வு முடிவுகள் என்பது ஒருவகையான தேர்வு தானே தவிர, யாரும் பயப்படக்கூடாது.
உங்களின் திறமைக்கான நாற்காலி, உங்களுக்காக எப்போதும் காத்துக்கொண்டு இருக்கிறது. இதற்காகத்தான் முதல்-அமைச்சர் முக.ஸ்டாலின், 'நான் முதல்வன்' என்ற திட்டத்தை உருவாக்கியுள்ளார். பொதுத்தேர்வு முடிவுகள் வரும் நாளில், மாணவர்களை வழிநடத்துவதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வுக்கு ஆர்வம் காட்டவில்லை என்ற தகவல் வெளியானது. இது தொடர்பாக, அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அவர்கள் அளித்த அறிக்கையில், அரசு பள்ளி மாணவர்களில் நீட் தேர்வு எழுதுபவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. அதிகம் தான் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.