வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த காதல் தம்பதி திருவிழாவில் பங்கேற்க அனுமதி மறுப்பா?


வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த காதல் தம்பதி திருவிழாவில் பங்கேற்க அனுமதி மறுப்பா?
x

வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த காதல் தம்பதி திருவிழாவில் பங்கேற்க அனுமதி மறுப்பா? என ஆர்.டி.ஓ. விசாரிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மதுரை

மதுரை,

வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த காதல் தம்பதி திருவிழாவில் பங்கேற்க அனுமதி மறுப்பா? என ஆர்.டி.ஓ. விசாரிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருவிழாவில் பங்கேற்க மறுப்பு

திருச்சி தொட்டியம் பகுதியை சேர்ந்த வனிதா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

திருச்சி, தொட்டியம் பகுதியிலுள்ள செந்தில்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். நாங்கள் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எங்கள் ஊரில் உள்ள கோவிலில் உள்ளே என்னையும், எனது கணவரையும் அனுமதிக்க கோவில் கமிட்டி உறுப்பினர்கள் மறுக்கின்றனர். மேலும் கிராம திருவிழாக்களிலும் எங்களை அனுமதிப்பது இல்லை.

வருகிற 9-ந் தேதி நடைபெற உள்ள கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு என்னிடம் வரியை பெற்றுக்கொள்ள மறுக்கின்றனர். மேலும் கும்பாபிஷேக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மன அழுத்தத்துக்கு ஆளாகி உள்ளோம். கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி, திருவிழாக்களில் பங்கேற்க அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

ஆர்.டி.ஓ. விசாரிக்க உத்தரவு

இந்த மனு நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்தபோது மனுதாரரை கோவில் திருவிழாக்களில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டதாக கமிட்டி உறுப்பினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

பின்னர் கோவில் கமிட்டி சார்பில் ஆஜரான வக்கீல், கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் யாரையும் கலந்து கொள்ளக்கூடாது என தெரிவிக்கவில்லை. அனைவரும் கலந்து கொள்ள அனுமதி உண்டு என்றார்.

இதனையடுத்து, மனுதாரர் மற்றும் அவரது கணவர் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஏற்கனவே நடந்த கோவில் விழாக்களில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படும் புகார் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணை செய்து, இது போன்ற பழக்கம் அந்த கிராமத்தில் உள்ளதா? என்பது குறித்த அறிக்கையை 20-ந்தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

மேலும் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கான மனுதாரரின் வரியை கிராம கமிட்டி பெற்றுக் கொண்டதையும், கும்பாபிஷேக நிகழ்ச்சி மற்றும் கோவிலில் மனுதாரர் அனுமதிக்கப்பட்டதையும் உறுதி செய்ய உத்தரவிட்டு, இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.


Related Tags :
Next Story