நீங்களும் எங்க சைடு தானா....! கருப்பு உடையில் வந்து சிக்கலில் மாட்டிய வானதி சீனிவாசன் .. சட்டசபை சுவாரசியம் !


நீங்களும் எங்க சைடு தானா....! கருப்பு உடையில் வந்து சிக்கலில் மாட்டிய வானதி சீனிவாசன் .. சட்டசபை சுவாரசியம் !
x

ராகுல்காந்தி தகுதி நீக்கத்தை கண்டித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் கருப்பு உடையில் சட்டப்பேரவைக்கு வந்த நிலையில், வானதி சீனிவாசன் கருப்பு புடவையில் வருகை தந்தார்.

சென்னை

பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் 2 ஆண்டு தண்டனை பெற்ற ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தின் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்தில் இன்று கருப்பு உடையில் பங்கேற்று உள்ளதாக காங்கிரஸ் எம்.பி.க்கள். அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை கண்டித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கருப்பு உடை அணிந்து சட்டசபைக்கு இன்று வருகை தந்தனர். அப்போது ராகுலுக்கு ஆதரவாக இருப்போம் என்ற வாசகத்துடன் கூடிய பதாகைகளுடன் பா.ஜ.க.வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி காங்.எம்.எல்.ஏ.க்கள் பேரவைக்கு வந்தனர்.

இந்நிலையில் சட்டப்பேரவை நிகழ்வுகளி கலந்து கொள்ள வந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கருப்பு புடவையுடன் பேரவைக்கு வந்ததை தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்கள் பதிவு செய்தனர்.

அப்போது 'எதேச்சையாக கருப்பு உடை அணிந்து வந்துட்டேன்' எனக் கூறி சமாளித்தார். அப்போது அருகில் இருந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி வானதி சீனிவாசனின் தோளில் தட்டி அவரிடம் நீங்களும் எங்க சைடு தானா எனகே கேட்க ஆளை விடுங்கடா சாமி என்ற படி சட்டபேரவைக்குள் வானதி சென்ற காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.


Next Story