ஆற்காடு நகராட்சியில் பகுதி சபை கூட்டம்
ஆற்காடு நகராட்சியில் பகுதி சபை கூட்டம் நடந்தது.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சி 14 -வது வார்டில் பகுதி சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் டாக்டர் பவளக்கொடி சரவணன் ஆணையாளர் (பொறுப்பு) ஏகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர மன்ற உறுப்பினர் கண்ணன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக ஆற்காடு தொகுதி ஜே.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு வார்டில் உள்ள மக்கள் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிந்தார். அதில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை கூட்டம் கூட்டுவது. கூட்டத்தின் நோக்கத்தை வளர்ச்சிப் பாதையில் எடுத்துச் செல்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் நாய் தொல்லை, கால்வாய் வசதி உள்ளிட்ட குறைகள் குறித்து பொதுமக்கள் தெரிவித்தனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்து நிவர்த்தி செய்வது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. நகர மன்ற உறுப்பினர்கள,் அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.