எட்டயபுரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள்
எட்டயபுரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
எட்டயபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு தடையில்லா சீரான மின் விநியோகம் வழங்குவதற்கு ஏதுவாக, சாய்ந்த மின்கம்பங்களை நிமித்தல், மின் பாதைக்கு அருகில் உள்ள மரக் கிளைகளை அகற்றுதல், பழுதடைந்த மின்கம்பங் களை மாற்றுதல் போன்ற பணிகள் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. எனவே, எட்டயபுரம் உப மின் நிலையத்தின் 3 உயர் அழுத்த மின் இணைப்புகளான எஸ். எஸ். டி. ஸ்பின்னிங் மில், ஷெர்லாக், கே. ஆர். ப்ளூ மெட்டல்ஸ் மற்றும் ராமனூத்து, சிந்தலக்கரை, ராஜா பட்டி, குமரெட்டியாபுரம், துரைச்சாமிபுரம் ஆகிய பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற் பொறியாளர் மு. சகர்பான் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story