சி.சுப்பிரமணியம், வி.கே.பழனிசாமி கவுண்டர், நா.மகாலிங்கம் உருவச்சிலையுடன் அரங்கம்
பி.ஏ.பி. திட்டம் உருவாக முக்கிய காரணமாக இருந்த சி.சுப்பிரமணியம், வி.கே.பழனிசாமி கவுண்டர், நா.மகாலிங்கம் ஆகியோ ருக்கு உருவச்சிலையுடன் அரங்கம் அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இந்த பணிகள் 7 மாதத் திற்குள் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பி.ஏ.பி. திட்டம் உருவாக முக்கிய காரணமாக இருந்த சி.சுப்பிரமணியம், வி.கே.பழனிசாமி கவுண்டர், நா.மகாலிங்கம் ஆகியோ ருக்கு உருவச்சிலையுடன் அரங்கம் அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இந்த பணிகள் 7 மாதத் திற்குள் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பி.ஏ.பி. திட்டம்
மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்யும் மழைநீர் மேற்கு நோக்கி பாய்ந்து கடலில் கலப்பதை தடுக்க கோவை, திருப்பூர் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் பி.ஏ.பி. (பரம்பிக்குளம் -ஆழியாறு) திட்டம் உருவாக்கப்பட்டது.
தமிழக-கேரள அரசுக ளின் ஒப்பந்தத்துடன் இந்த திட்டத்தின் கீழ் அணைகள் கட்டப் பட்டு, மலையை குடைந்து கால்வாய்கள் அமைக்கப்பட்டன.
இந்த திட்டம் உருவாக முக்கிய காரணமாக இருந்த வி.கே.பழனிசாமி கவுண்டர், முன்னாள் மத்திய மந்திரி சி.சுப்பிரமணியம், நா.மகாலிங்கம் ஆகியோரை சிறப்பிக்கும் வகையில் அவர்களின் உருவச்சிலை மற்றும் விவசாயிகளுக்கு மாநாட்டு பயிற்சி மண்ட பம் ஆகியவை பொள்ளாச்சி-உடுமலை ரோட்டில் உள்ள பி.ஏ.பி. அலுவலகத்தில் கட்டப்படுகிறது.
அடிக்கல் நாட்டு விழா
இந்த பணிகளுக்கு சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பொள்ளாச்சியில் நடந்த விழாவில் பொதுப்பணி துறை தலைமை பொறியாளர் முத்துசாமி, முன்னாள் திருமூர்த்தி நீர்தேக்க திட்ட குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம், புதிய ஆயக்கட்டு பாசன சங்க செயலாளர் செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
பொள்ளாச்சியில் உள்ள பரம்பிக்குளம்-ஆழியாறு திட்ட அலு வலக வளாகத்தில் விவசாயிகளுக்கு மாநாட்டு பயிற்சி மண்டபம், வி.கே.பழனிசாமி கவுண்டர், முன்னாள் மத்திய மந்திரி சி.சுப்பிர மணியம், நா.மகாலிங்கம் ஆகியோருக்கு திருவுருவ சிலை அமைக் கப்படுகிறது.
ரூ.4¼ கோடி ஒதுக்கீடு
இந்த பணிகள் மேற்கொள்ள ரூ.4 கோடியே 28 லட்சத்து 71 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 1,374 சதுர மீட்டர் பரப்பளவில் தரைத்தளத்தில் மாநாட்டு மண்டபம், முதல் தளத்தில் கண்காட்சி அரங்கம் மற்றும் கழிப்பறை ஆகியவை அமைக்கப்படுகிறது. இந்த பணிகளை 7 மாத காலத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.