தொழிலாளியிடம் கத்திமுனையில் பணம் பறித்த 4 பேர் கைது


தொழிலாளியிடம் கத்திமுனையில் பணம் பறித்த  4 பேர் கைது
x
திருப்பூர்


பெருமாநல்லூரில் கத்தி முனையில் பணம் பறித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பணம் பறிப்பு

பெருமாநல்லூர் அருகே வட்டாளபதி கிராமம் கருணாம்பதி பகுதியைச் சேர்ந்தவர் பிரபு(வயது 44). பனியன் நிறுவன தொழிலாளி. இவர் சம்பவத்தன்று இரவு பெருமாநல்லூரில் உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.10 ஆயிரம் எடுத்துக் கொண்டு, இருசக்கர வாகனத்தில் குன்னத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

கொண்டத்துக்காளியம்மன் கோவில் அருகே சென்ற போது இவருக்கு பின்னால் 2 மோட்டார்சைக்கிளில் 4 பேர் வந்தனர். அந்த 4 ஆசாமிகளும் சேர்ந்து பிரபு விடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.10 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து பிரபு அளித்த புகாரின் பேரில் பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

4 பேர் கைது

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவைக் ஆய்வு செய்தனர். அதில் பதிவாகி உள்ள அடையாளத்தை கொண்டு வழிப்பறியில் ஈடுபட்ட ஈட்டிவீராம்பாளையம் லட்சமி நகரைச் சேர்ந்த சிவக்குமார் மகன் அரவிந்த்(23), அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சிவசங்கர்(22), முட்டியங்கிணறு பகுதியைச் சேர்ந்த ரமேஷ் மகன் சாரதி(21), அணைப்பதி பகுதியைச் சேர்ந்த குப்புசாமி மகன் பரசுராமன்(24) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து 2 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story