பனியன் ஏற்றுமதியாளரிடம் ரூ.50 லட்சம் மோசடி


பனியன் ஏற்றுமதியாளரிடம் ரூ.50 லட்சம் மோசடி
x
திருப்பூர்


திருப்பூர் தாராபுரம் ரோட்டை சேர்ந்தவர் ரத்தினசாமி (வயது 50). பனியன் ஏற்றுமதி நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இவரிடம் கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த ஜூஸர்சாய்புதீன் (69), அவருடைய மகன் உசைபாஜூஸர் (28) ஆகியோர் அறிமுகமானார்கள்

தாங்கள் கேரள அரசின் மின்வாரிய துறையில் மின்சாதன பொருட்கள் வினியோகம் செய்ய டெண்டர் எடுத்துள்ளதாகவும், அதில் முதலீடு செய்தால் மாதந்தோறும் 10 சதவீதம் லாபம் தருவதாக ரத்தினசாமியிடம் தெரிவித்துள்ளனர். இதை நம்பிய ரத்தினசாமி கடந்த 2021-ம் ஆண்டு ரூ.50 லட்சத்தை அவர்களிடம் கொடுத்தார். ஆனால் அதன்பிறகு மாதந்தோறும் லாபம் கொடுக்காமல் காலம் கடத்தியதாக தெரிகிறது. மேலும் அவர்கள் கொடுத்த காசோலையும் பணம் இல்லாமல் திரும்பியது.

இதுகுறித்து ரத்தினசாமி திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில், ஜூஸர்சாய்புதீன், மின்வாரிய பொருட்கள் டெண்டர் எடுத்து பணம் இல்லாததால், கோவை, திருப்பூர் போன்ற இடங்களில் சிலரிடம் ஏமாற்றி பணத்தைபெற்று மோசடி செய்தது தெரியவந்தது. இந்த மோசடி சம்பவம் தொடர்பாக கடந்த வாரம் கோவை போலீசார் 2 பேரை கைது செய்தனர். பின்னர் திருப்பூர் மோசடி தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் 2 பேரையும் போலீஸ் பாதுகாப்பில் எடுத்து கைது செய்து பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். இந்த மோசடி சம்பவத்தில் மேலும் 3 பேரை தேடி வருகிறார்கள்.

1 More update

Next Story