அ.தி.மு.க.வினர்-போலீசார் இடையே வாக்குவாதம்
அ.தி.மு.க.வினர்-போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
திருச்சி
செம்பட்டு:
திருச்சி திருவெறும்பூர் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திருச்சி வந்தார். இதையொட்டி அவரை வரவேற்பதற்காக அ.தி.மு.க.வினர் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் கட்சி கொடியை நட்டனர். அப்போது அங்கு ரோந்து வாகனத்தில் வந்த ஏர்போர்ட் போலீசார், அ.தி.மு.க.வினரிடம் அங்கு கட்சிக்கொடி நடக்கூடாது என்று தெரிவித்தனர். இது தொடர்பாக அ.தி.மு.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story