பா.ஜ.க.-போலீசாருக்கு இடையே வாக்குவாதம்
பா.ஜ.க.-போலீசாருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
புதுக்கோட்டை
அறந்தாங்கி:
மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைத்து 8 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டியும், 8 ஆண்டு கால சாதனை குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக நேற்று மாவட்ட மகளிர் அணி தலைவி அமுதவள்ளி தலைமையில் அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவிலில் இருந்து பா.ஜ.க.வினர் ஊர்வலமாக அறந்தாங்கி பஸ் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் பா.ஜ.க.வின் சாதனை குறித்து விளக்கி பேசினர். இதையடுத்து அங்கு வந்த அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு தினேஷ்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் பா.ஜ.க.வினரிடம் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கவில்லை. இதனால் அனைவரும் கைது செய்யப்படுவார்கள் என கூறினர். இதனால் பா.ஜ.க.வினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பா.ஜ.க.வினர் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story