நடுரோட்டில் பஸ்களை நிறுத்தி தகராறு; 2 டிரைவர்கள் கைது


நடுரோட்டில் பஸ்களை நிறுத்தி தகராறு; 2 டிரைவர்கள் கைது
x

நடுரோட்டில் பஸ்களை நிறுத்தி தகராறு செய்த 2 டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை மகாராஜநகர் பகுதியில் பயணிகள் ஏற்றுவதில் 2 தனியார் பஸ் டிரைவர்களுக்குள் போட்டி ஏற்பட்டது. இதனால் அந்த டிரைவர்கள் தங்களின் பஸ்களை ஒன்றுடன் ஒன்றை உரசிவிட்டு நடுரோட்டில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதுகுறித்து நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அன்னராஜ் விசாரணை நடத்தி பஸ் டிரைவர்களான பாளையஞ்செட்டிகுளத்தை சேர்ந்த மாடசாமி (வயது 29), வடிவுராஜ் (27) ஆகியோரை கைது செய்தனர். இதுகுறித்து பயணிகள் கூறுகையில், "அதிவேகமாக இயக்கப்படும் பஸ்கள் மீது மாநகர போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.


Next Story