மதுபோதையில் தகராறு; தொழிலாளி அடித்துக்கொலை


மதுபோதையில் தகராறு; தொழிலாளி அடித்துக்கொலை
x

மயிலாடுறை அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அண்ணன்-தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை

மயிலாடுறை அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அண்ணன்-தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தகராறு

மயிலாடுதுறை அருகே நீடூரை அடுத்த கங்கணம்புத்தூர் பெரிய தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருடைய மகன் புனிதன்(வயது 35). கூலி தொழிலாளியான இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.இந்த நிலையில் புனிதன் நேற்று முன்தினம் இரவு தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்்த துரை மகன் தர்மேந்திரன்(27), பாண்டியன் மகன்கள் ரஞ்சித்(25), பிரசாத்(21) ஆகியோர் வீட்டின் அருகே மது குடித்துள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

அடித்துக்ெகாலை

அப்போது ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் ஆத்திரம் அடைந்த தர்மேந்திரன், ரஞ்சித், பிரசாத் ஆகியோர் புனிதனை கைகள் மற்றும் கட்ைடயால் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த புனிதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீஸ் சூப்பிரண்டு நிஷா, துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

3 பேர் கைது

பின்னர் புனிதனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மேந்திரன், ரஞ்சித், பிரசாத் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.பின்னர் கைது செய்யப்பட்ட 3 பேரும் மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story