பஸ் டிரைவரிடம் தகராறு; சிறுவன் உள்பட 2 பேர் கைது


பஸ் டிரைவரிடம் தகராறு; சிறுவன் உள்பட 2 பேர் கைது
x

பஸ் டிரைவரிடம் தகராறு; சிறுவன் உள்பட 2 பேர் கைது

திருவாரூர்

நன்னிலத்தில் இருந்து சர்குணேஷ்வரபுரத்திற்கு நேற்று மாலை ஒரு அரசு பஸ் 50-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி சென்று கொண்டிருந்தது. பஸ்சை ரவிச்சந்திரன் என்பவர் ஓட்டிச்சென்றார். அதம்பார் கிராமத்தின் அருகே பஸ் சென்று கொண்டிருந்த போது, பின்னால் 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் சென்றுள்ளனர். அவர்கள் ஒலி எழுப்பியும் பஸ் டிரைவர் மோட்டார்ைசக்கிள்களுக்கு வழிவிடவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மோட்டார்சைக்கிளில் முந்தி சென்று பஸ்ைச வழிமறித்தனர். பின்னர் பஸ்சில் ஏறி டிரைவரிடம் தகராறு செய்தனர். இதனை கண்டக்டர் கார்த்திகேயன் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார். அப்போது அவர்கள் கண்டக்டரையும் மிரட்டினர். தற்போது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து நன்னிலம் போலீசில் ரவிச்சந்திரன் கொடுத்தபுகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நன்னிலம் அருகேயுள்ள அதம்பார் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன்(வயது21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய 2 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.


Related Tags :
Next Story