மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறு: தீக்குளித்த கணவர் சாவு


மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறு: தீக்குளித்த கணவர் சாவு
x
தினத்தந்தி 5 Jan 2023 1:15 AM IST (Updated: 5 Jan 2023 3:20 PM IST)
t-max-icont-min-icon

மது அருந்தி விட்டு மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் தீக்குளித்த கணவர் பரிதாபமாக இறந்தார்.

சேலம்

சேலம் அம்மாப்பேட்டை காமராஜர் காலனி சாஸ்திரி நகரை சேர்ந்தவர் நாகேஸ்வரன் (வயது 42). இவருடைய மனைவி ரஞ்சிதம் மலர் (38). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். நாகேஸ்வரனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாம். அவர் தினமும் மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. அந்த வகையில் புத்தாண்டு அன்றும் அவர் மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் வேதனை அடைந்த நாகேஸ்வரன், பெயிண்ட் அடிக்க பயன்படுத்தும் தின்னரை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். பின்னர் வலியால் அலறி துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story