ஆரி கவுடரின் 52-வது நினைவு தினம் அனுசரிப்பு


ஆரி கவுடரின் 52-வது நினைவு தினம் அனுசரிப்பு
x
தினத்தந்தி 29 Jun 2023 2:00 AM IST (Updated: 29 Jun 2023 2:01 AM IST)
t-max-icont-min-icon

ஆரி கவுடரின் 52-வது நினைவு தினம் அனுசரிப்பு

நீலகிரி

ஊட்டி

நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தினர் நிறுவனரும், படுக சமுதாயத்தின் முதல் பட்டதாரி மற்றும் முதல் சட்டசபை உறுப்பினருமான ஹெச்.பி.ஆரி கவுடரின் 52-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

இதையொட்டி ஊட்டி என்.சி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள ஆரி கவுடரின் சிலைக்கு ஆரிகவுடர் நினைவு விழாக்குழு சார்பிலும், என்.சி.எம்.எஸ். நிர்வாகத்தின் சார்பிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

ஆரி கவுடர் நினைவு விழாக்குழு தலைவரும், படுக தேச பார்ட்டி நிறுவன தலைவருமான மஞ்சை மோகன் தலைமை தாங்கினார்.

ஆரி கவுடரின் பேத்தி தாரா ஜெயபிரகாஷ், அவரது கணவர் விங் கமாண்டர் ஜெயப்பிரகாஷ், நீலகிரி கூட்டுறவு விவசாய சங்க முன்னாள் தலைவர் கண்ணபிரான் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

நாக்குப்பெட்டா படுக சமுதாய தலைவர் பேராசிரியர் அய்யாரு கலந்துக்கொண்டு, ஆரி கவுடர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில் முன்னாள் இளம் படுகர் சங்க நிர்வாகி ரவிக்குமார், கூட்டுறவு விற்பனை சங்க நிறுவன மேலாளர் கணேசன் மற்றும் நிறுவன அதிகாரிகள், பணியாளர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.


Next Story