அமைதி நிலைக்கு மாறிய அரிக்கொம்பன்.. ஸ்டைலாக புல்லை கழுவி சாப்பிடும் காட்சிகள்.!


அமைதி நிலைக்கு மாறிய அரிக்கொம்பன்.. ஸ்டைலாக புல்லை கழுவி சாப்பிடும் காட்சிகள்.!
x

வனப்பகுதியில் உள்ள புற்களை பிடுங்கி கழுவி உண்ணும் காட்சிகளை, வனத்துறை பகிரிந்துள்ளது.

நெல்லை,

குற்றியாறு வனப்பகுதியில் அரிக்கொம்பன் அமைதியாக உலா வந்து வனப்பகுதியில் உள்ள புற்களை பிடுங்கி கழுவி உண்ணும் காட்சிகளை, வனத்துறை பகிரிந்துள்ளது.

நெல்லை மாவட்ட வனப்பகுதியை ஒட்டியுள்ள அகத்தியமலை யானைகள் காப்பகத்தின் ஒரு பகுதியான குற்றியாறு வனப்பகுதியில் அரி கொம்பன் விடப்பட்டது. தொடர்ந்து யானையின் நடமாட்டத்தை, இரண்டு துணை இயக்குனர்கள், கால்நடை அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர்கள், உயிரியளாளர்கள் மற்றும் 10 பேர் கொண்ட பேட்டை எதிர்ப்பு காவலர்கள் அடங்கிய குழு, கண்காணித்து வருகிறது.

அழகிய இயற்கை சூழல் கொண்ட குற்றியாறு அணைப்பகுதியில் இருக்கும் புள்ளை எடுத்து கழுவி, உண்ணும் காட்சிகளை, வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு பகிர்ந்து உள்ளார். அந்த காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.


1 More update

Next Story