கேந்திரிய வித்யாலயா பள்ளியில் எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம்


கேந்திரிய வித்யாலயா பள்ளியில் எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம்
x

தெற்கு விஜயநாராயணம் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் நடந்தது.

திருநெல்வேலி

இட்டமொழி:

நெல்லை மாவட்டம் தெற்கு விஜயநாராயணத்தில் உள்ள கடற்படைத்தளம் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணியல் குறித்த பயிலரங்கம் நடைபெற்றது. இதில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 78 ஆசிரியர்கள் பங்கேற்றனர். கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் என்.ராகேஷ் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்து பேசினார். ஆசிரியர்களுக்கு விளக்கக்காட்சிகள் மற்றும் செயல்பாடுகளின் மூலம் விளக்கப்பட்டது. பயிலரங்கின் முடிவில் புஷ்பலதா வித்யாமந்திரை சேர்ந்த அர்ச்சனா நன்றி கூறினார்.


Next Story