சுல்தான்பேட்டையில் எண்ணும், எழுத்தும் பயிற்சி வகுப்பு தொடக்கம்


சுல்தான்பேட்டையில்  எண்ணும், எழுத்தும் பயிற்சி வகுப்பு தொடக்கம்
x
தினத்தந்தி 2 Jun 2023 12:15 AM IST (Updated: 2 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சுல்தான்பேட்டையில் எண்ணும், எழுத்தும் பயிற்சி வகுப்பு தொடக்கம்

கோயம்புத்தூர்

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் ஆதிதிராவிட நலப் பள்ளிகளில் 4-ம் வகுப்பு 5-ம் வகுப்பு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கான எண்ணும், எழுத்தும் பயிற்சி வகுப்பு நேற்று சுல்தான்பேட்டையில் உள்ள வட்டார வளமைய அலுவலக வளாகத்தில் நடந்தது. இதனை வட்டார கல்வி அலுவலர் பிரான்சிஸ் சார்லஸ் தொடங்கி வைத்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் முகமது ரபி முன்னிலை வகித்தார். ஆசிரியப் பயிற்றுநர்கள்ஷோபனா, சோபியா, கார்த்திகேயன் மற்றும் கருத்தாளர்கள் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். முடிவில் மேட்டுலட்சுமி நாயக்கன்பள்ளி தலைமைஆசிரியர் லட்சுமணசாமி நன்றி கூறினார். இந்த பயிற்சி தொடர்ந்து 3 நாட்கள் நடைபெறுகிறது.


Next Story