அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளராக அமைச்சர் சிவசங்கர் போட்டியின்றி மீண்டும் தேர்வு


அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளராக அமைச்சர் சிவசங்கர் போட்டியின்றி மீண்டும் தேர்வு
x

அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளராக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.

அரியலூர்

அமைச்சர் சிவசங்கர் தேர்வு

தி.மு.க.வின் 15-வது பொதுத்தேர்தலின் படி அரியலூரில் கட்சிக்கு பேரூர், ஒன்றிய, நகர, மாவட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செயலாளர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட நிர்வாகிகள் பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் நேற்று முன்தினம் வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-

அரியலூர் மாவட்ட தி.மு.க. செயலாளராக தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் போட்டியின்றி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மாவட்ட தி.மு.க. அவைத்தலைவராக மாணிக்கம், துணை செயலாளர்களாக (பொது) சந்திரசேகரன், (ஆதிதிராவிடர்) கணேசன், (மகளிர்) லதா பாலு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட பொருளாளர்

கட்சியின் மாவட்ட பொருளாளராக ராஜேந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர்களாக சுபா.சந்திரசேகர், எம்.பி.பாலசுப்ரமணியன், பொதுக்குழு உறுப்பினர்களாக பாலு என்ற பாலசுப்ரமணியன், ஆர்.எம்.அன்பழகன், வி.எம்.ஷாஜஹான், சி.ஆர்.எம்.பொய்யாமொழி, சுமதி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

கட்சியின் ஒன்றிய செயலாளர்களாக அறிவழகன் (அரியலூர் வடக்கு), மா.அன்பழகன் (அரியலூர் தெற்கு), தனசேகர் (ஜெயங்கொண்டம் வடக்கு), மணிமாறன் (ஜெயங்கொண்டம் தெற்கு), க.சொ.க.கண்ணன் எம்.எல்.ஏ. (தா.பழூர் கிழக்கு), சவுந்தரராஜன் (தா.பழூர் மேற்கு), கென்னடி (திருமானூர் கிழக்கு), அசோக சக்கரவர்த்தி (திருமானூர் மேற்கு) எழில்மாறன் (செந்துறை வடக்கு), செல்வராஜ் (செந்துறை தெற்கு), ரெங்க.முருகன் (ஆண்டிமடம் வடக்கு), கலியபெருமாள் (ஆண்டிமடம் தெற்கு) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

Murugesan (Ariyalur) and Karunanidhi (Jayankondam) have been elected as city secretaries of the party. Party members and comrades are congratulating them.


Next Story