அரியலூர்: சட்ட விரோதமாக மது விற்பனை - ஒருவர் கைது


அரியலூர்: சட்ட விரோதமாக மது விற்பனை - ஒருவர் கைது
x

ஜெயங்கொண்டம் அருகே சட்ட விரோதமாக மது விற்பனை செய்தது தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்தனர்.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உரிய அனுமதி இல்லாமல் மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக வந்த தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின் பேரில் தா.பழூர் காவல் ஆய்வாளர் ஜெகதீசன் தலைமையிலான சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் நிக்கோலஸ் மற்றும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது கோடாலி கருப்பூர் பகுதியில் மதுபாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை செய்வதாக வந்த தகவலின் பேரில், அந்த பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அதே பகுதியை ஜெயராமன் மகன் துளசி ராமன் (வயது 29) என்பவர் வீட்டின் பின்புறம் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்து 52 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


Next Story