அரியலூர் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. கூட்டம்
அரியலூர் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. கூட்டம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமை தாங்கி, கட்சியின் வளர்ச்சிகள், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, பூத் கமிட்டி அமைப்பது குறித்து பேசினார். தொடர்ந்து ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி மதுரையில் நடைபெறும் மாநில மாநாட்டில் அனைத்து அணியினரும் திரளாக சென்று கலந்து கொண்டு சிறப்பித்து, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அவைத்தலைவர் ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம், மாவட்ட பொருளாளர் அன்பழகன், மாவட்ட துணை செயலாளர் தங்க பிச்சமுத்து, அரியலூர் தெற்கு ஒன்றியச்செயலாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய துணைச்செயலாளர் சிவசங்கர், வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், தாமரைக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பிரேம்குமார், கல்லக்குறிச்சி பாஸ்கர் உள்பட கட்சி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தெற்கு ஒன்றிய துணை செயலாளர் சங்கர் நன்றி கூறினார்.