திரவுபதியம்மன் கோவிலில் அர்ஜூனன் தபசு நிகழ்ச்சி


திரவுபதியம்மன் கோவிலில் அர்ஜூனன் தபசு நிகழ்ச்சி
x

திரவுபதியம்மன் கோவிலில் அர்ஜூனன் தபசு நிகழ்ச்சி திருத்தணி அடுத்த மேல்திருத்தணியில் நடந்தது.

திருவள்ளூர்

திருத்தணி அடுத்த மேல்திருத்தணியில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 27-ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்து வருகிறது. கடந்த 3-ந் தேதி சுபத்திரை திருக்கல்யாணம் நடந்தது.

இந்நிலையில் நேற்று காலை 11 மணிக்கு கோவில் வளாகத்தில் அர்ஜூனன் தபசு நடந்தது. இதில் அர்ஜூனன் பனை மரத்தில் ஒவ்வொரு படிக்கும் ஒரு பாட்டு வீதம் பாடி ஏறி உச்சிக்கு சென்றார். அங்கு சிவபெருமானை நோக்கி தவம் புரிந்தார். அப்போது பனைமரத்தின் கீழ் பெண்கள் வணங்கி பூஜைகள் செய்து வழிப்பட்டனர். மேலும் சில பெண்கள் குழந்தை வரம் வேண்டி தரையில் படுத்து தியானம் செய்தனர்.

வருகின்ற 14-ந் தேதி காலையில் துரியோதனன் படுகளம், பின் பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 6 மணிக்கு தீமிதி விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.


Next Story