அர்ஜுனன் தபசு மரம் ஏறும் விழா


அர்ஜுனன் தபசு மரம் ஏறும் விழா
x

பென்னகார் கிராமத்தில் அர்ஜூனன் தபசு மரம் ஏறும் விழா நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த பென்னகார் கிராமத்தில் அக்னி வசந்த விழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.இதையொட்டி தினமும் மகாபாரத சொற்பொழிவும், இரவில் நாடகமும் நடந்து வருகிறது. இந்த நிலையில் அர்ஜுனன் தபசு மரம் ஏறும் விழா நடைபெற்றது. இதையொட்டி நாடகக் கலைஞர் விரதம் இருந்து அர்ஜுனன் வேடம் அணிந்து 60 அடி உயரத்தில் தபசு மரத்தில் ஏறி ஒவ்வொரு படிக்கும் ஒரு பாட்டுபாடி தபசு மரம் ஏறினார்.

அப்போது தபசு மரத்தின் அடியில் பெண்கள் ஈரத் துணியுடன் குழந்தை வரம் வேண்டியும், திருமணம் தடை நீங்கவும் விரதம் இருந்து அர்ஜுனன் மேலே இருந்து வீசப்பட்ட எலுமிச்சம் பழம், பூக்கள், வில்வ இலைகளை எடுத்துச்சென்றனர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story