ஆயுதப்படை போலீசார் ரத்ததானம்


ஆயுதப்படை போலீசார் ரத்ததானம்
x
தினத்தந்தி 25 Dec 2022 12:15 AM IST (Updated: 25 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் ஆயுதப்படை போலீசார் ரத்ததானம் செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் அறிவுறுத்தலின் பேரில் தூத்துக்குடி மில்லர்புரத்திலுள்ள ஆயுதப்படை வளாகத்தில் நேற்று ஆயுதப்படை போலீசார் சார்பாக ரத்ததான சிறப்பு முகாம் நடந்தது. முகாமில் ஆயுதப்படையைச் சேர்ந்த 6 பெண் போலீசார் உட்பட 50 போலீசார் ரத்த தானம் வழங்கினர்.

இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் சுடலைமுத்து மற்றும் தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ரத்த சேமிப்பு வங்கி மருத்துவ அலுவலர் ராஜேஷ் ஆகியோர் தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.


Next Story