மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி ஆயுதப்படை போலீஸ்காரர் படுகாயம்


மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி ஆயுதப்படை போலீஸ்காரர் படுகாயம்
x

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி ஆயுதப்படை போலீஸ்காரர் படுகாயம் அடைந்தார்.

கரூர்

கிருஷ்ணராயபுரம்,

லாலாபேட்டை அருகே உள்ள எழுநூற்று மங்கலத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் பிரபு (வயது 31). இவர் கரூர் ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் சம்பவத்தன்று பணி நிமித்தமாக அரவக்குறிச்சிக்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். லாலாபேட்டை மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியாக திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியை சேர்ந்த அல்லி முத்து (42) என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக, பிரபு ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பிரபு படுகாயம் அடைந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story