துப்பாக்கி தொழிற்சாலையில் ஆயுத கண்காட்சி


துப்பாக்கி தொழிற்சாலையில் ஆயுத கண்காட்சி
x

துப்பாக்கி தொழிற்சாலையில் ஆயுத கண்காட்சி நடந்தது.

திருச்சி

துவாக்குடி:

திருச்சியை அடுத்த நவல்பட்டு அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை மனமகிழ் மன்றத்தில், எம்.ஐ.எல். உதய தினத்தையொட்டி நேற்று பல்வேறு பீரங்கி எதிர்ப்பு வெடிமருந்துகள் மற்றும் நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு கடற்படை ராக்கெட்டுகளின் தயாரிப்புகள் கண்காட்சி தொடங்கியது. இந்த கண்காட்சியை பொது மேலாளர் தியாகி தொடங்கி வைத்தார். இதில் எச்.இ.பி.எப். பெண்கள் நலச்சங்க தலைவர் பூனம் தியாகி, எச்.இ.பி.எப். தொழிற்சாலை அதிகாரிகள், ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு கண்காட்சியில் இடம் பெற்றுள்ள ஆயுதங்களை பார்வையிட்டனர். மேலும் எம்.ஐ.எல். உதய தினம் கொண்டாட்டம் இன்று(ஞாயிற்றுக்கிழமை) எச்.இ.பி.எப். தொழிற்சாலை வளாகத்தில் நடைபெறுகிறது. மனமகிழ் மன்றத்தில் கலாசார நிகழ்ச்சி நடைபெறுகிறது.


Next Story