ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x

கோத்தகிரியில் புனித ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்தடன் தொடங்கியது.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரியில் புனித ஆரோக்கிய மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்தடன் தொடங்கியது.

தேர்த் திருவிழா

கோத்தகிரி பஸ்நிலையம் அருகே 155 ஆண்டு பழமை வாய்ந்த புனித ஆரோக்கிய மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 7 மணிக்கு நீலகிரி மறை மாவட்ட முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ், கொடியை ஏற்றி வைத்தார். இதில் ஆலய பங்கு தந்தை ஞானதாஸ் மற்றும் பங்கு மக்கள் கலந்துகொண்டனர்.

மாலையில் பங்கு தந்தை ஆன்டனி டேவிட் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. பங்கு தந்தை மார்க் மறையுரை வழங்கினார். இன்று (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு திருப்பலியும், குன்னூர் பங்கு தந்தை ரொசாரியோவும், ராபர்ட் மறையுறையும் வழங்குகின்றனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலையில் திருப்பலி நடைபெறுகிறது. தொடர்ந்து ஆலயத்தில் இருந்து நற்கருணை பவனி புறப்பட்டு பஸ்நிலையம், மார்க்கெட் திடல் வழியாக புனித அந்தோணியார் நடுநிலை பள்ளியில் நிறைவடைகிறது. மாலை 5.30 மணிக்கு குன்னூர் பங்கு தந்தைகள் அந்தோணிசாமி, தாமஸ் ஆகியோர் தலைமையில் திருப்பலி மற்றும் மறையுரை நடைபெறுகிறது.

ஆடம்பர தேர்பவனி

வருகிற 10-ந் தேதி திருப்பலியும், மறையுரையும் நடக்கிறது. விழாவின் முக்கிய நாளான வருகிற 11-ந் தேதி காலை 6 மணிக்கு பங்கு தந்தை ராஜநாயகம் தலைமையில் தமிழில் திருப்பலியும், 7 மணிக்கு பிஜு தண்ணி கொட்டில் தலைமையில் ஆங்கிலத்தில் திருப்பலியும், 9 மணிக்கு கூட்டுபாடல் திருப்பலியும் நடைபெறுகிறது. மாலை 4.30 மணிக்கு சோலூர்மட்டம் பங்கு தந்தை அலெக்ஸ் தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது. மாலை 6.15 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில், ஆரோக்கிய மாதா வீற்றிருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக பவனி வரும் ஆடம்பர தேர்பவனி நடைபெறுகிறது. பின்னர் நற்கருணை ஆசீர் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆலய விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.


Next Story