ஆரோக்கியநாதர் ஆலய திருவிழா


ஆரோக்கியநாதர்   ஆலய திருவிழா
x

தூத்துக்குடியில் ஆரோக்கியநாதர் ஆலய திருவிழா நடைபெற்றது.

தூத்துக்குடி

தூத்துக்குடி ஆரோக்கியபுரம் புனித ஆரோக்கியநாதா் ஆலய திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் திருப்பலி, மறையுரை நடந்து வந்தது. விழாவை முன்னிட்டு இன்று (சனிக்கிழமை) காலை 6.30 மணிக்கு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர்செல்வம் தலைமையில் பங்கு தந்தைகள் பனிமயம் (அடைக்கலாபுரம்), கோவில்மணி (கள்ளிகுளம்), வின்சென்ட் (தருவைகுளம்) ஆகியோர் முன்னிலையில் திருவிழா மாலை ஆராதனை நடக்கிறது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 5.45 மணிக்கு பங்குதந்தைகள் பென்சன், பால்சாமி ஆகியோர் தலைமையில் ஆடம்பர திருப்பலி, மறையுரை நடக்கிறது. மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீர் பவனி, கொடியிறக்க நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தாளமுத்துநகர் பங்குதந்தை நெல்சன், துணை பங்குதந்தை வின்சென்ட் மற்றும் பங்கு மக்கள், ஊர் நிர்வாகிகள் செய்து உள்ளனர்.


Next Story