ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்


ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆர்ப்பாட்டம்
x
திருப்பூர்


மடத்துக்குளம் வட்டார கல்வி அலுவலகத்தின் முன் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைத் தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். வட்டாரத்தலைவர் நாகராஜ், வட்டாரச் செயலாளர் பாபு பாஸ்கால், மாவட்ட துணைச்செயலாளர் அருள்ஜோதி செல்வன் உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது, தொடக்கக்கல்வி மாணவர்களின் கல்வித் தரத்தைப்பாதிக்கும் எண்ணும் எழுத்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும். தொடக்கக்கல்வி மாணவர்களுக்கான இணையவழி தேர்வுகளை கைவிட வேண்டும். காலை உணவுத்திட்டத்தை 6,7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.


Next Story