தேங்காய்க்கு விலை கேட்டு பெண்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்


தேங்காய்க்கு விலை கேட்டு பெண்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
x
திருப்பூர்


திருப்பூர் மாவட்டம் அவினாசிபாளையத்தில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கடந்த 5-ம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. 26 வது நாளாக நேற்று போராட்டம் நடந்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டங்களை நடத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக விவசாயிகள் நடத்தினர். இன்றுடன் (ஞாயிறு) விவசாயிகளின் இந்த காத்திருப்பு போராட்டம் நிறைவு பெறுகிறது. அரசு தங்களை அழைத்து பேச வேண்டும் என்ற கோரிக்கையுடன் அடுத்த கட்டமாக பல்வேறு விதமான போராட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று நடந்த போராட்டத்திற்கு பேபி ராமசாமி தலைமை தாங்கினார். கவிதா முத்துக்குமார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இந்த போராட்டத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி, நொய்யல் பாதுகாப்பு இயக்கத்தின் திருஞானசம்பந்தன், களஞ்சியம் பொன்னுசாமி, நஞ்ச ராயன்குளம் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் கே. எ. கிருஷ்ணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். தேங்காய்க்கு உரிய விலை வேண்டும் என்று தேங்காய்க்கு பெண்கள் உள்பட பலர் பூஜை செய்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். போராட்டத்திற்கான ஏற்பாடுகளை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய மகளிர் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story