பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்


பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
x
திருப்பூர்


காங்கயம் நகர பஸ் நிலைய வளாகத்தில் நேற்று காலை 11 மணியளவில் இந்திய மாணவர்கள் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் காங்கயம் தாலுகா செயலாளர் காளியப்பன் தலைமை தாங்கினார்.

இதில் மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக இழுத்து சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தவர்களை கண்டித்தும், அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் கொடிகளை பிடித்து கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர்கள் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், இந்திய தொழிற்சங்க மையம் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story